சமீபத்தில் வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றவர். அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 3ல் திரையில் கலந்து கொண்டார். இவரை ஒரு புரட்சிப் பெண்மணி ஆகவே பெண்கள் மத்தியில் கருதப்பட்டார்.
ஆனால் இவர் எடுத்த அனைத்து நல்ல பெயரையும் இவரது மூன்றாவது திருமணம் மொத்தமாக கெடுத்து விட்டது என்றே கூறவேண்டும். தற்பொழுது வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு ஒரு மகன் உள்ளார் . ஆனால் பீட்டர் பால் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துள்ளார்.
இந்த செய்தி மிகவும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் வனிதா தன்னைப் பற்றி விமர்சித்தவர்களுக்கு பதிலடியாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்பொழுது தன் கணவர் பீட்டர் பால் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு, மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று கேப்ஷனும் போட்டுள்ளார். வெறும் புகைப்படத்தை பதிவிட்டாலே சும்மா விடமாட்டார்கள் கேப்ஷனும் சேர்ந்து போட்டதால் இவரை வச்சு செய்து வருகின்றனர்.