கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 3வது சீசன் மூலம் கம்பேக் கொடுத்தார் வனிதா விஜயகுமார். அந்த சீசனில் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் கலகலப்பாக இருந்து வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் வனிதாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்தன.
அதேபோல் கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை ஓராண்டு கூட நீடிக்காமல் போனது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பீட்டர் பால் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதாக கூறி அவரை துரத்தி விட்டார் வனிதா.
இந்த நிலையில் பீட்டர் பால் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.