Friday, March 29, 2024
-- Advertisement--

வந்தே பாரத் ரயிலை இயக்கும் முதல் பெண் ஓட்டுநர்…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

நாட்டில் ரயில் பயண நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சேர்ந்த சுரேகா யாதவ் வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ரயில் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் நேற்று மகாராஷ்டிராவில் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினல் வரை வந்தே பாரத்தை இயக்கினார். இது குறித்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டர் பக்கத்தில் “வந்தே பாரத் – பெண் சக்தியால் இயக்கப்படுகிறது.

சுரேகா யாதவ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முதல் பெண் லோகோ பைலட்” என குறிப்பிட்டுள்ளார். சதாராவை சேர்ந்த சுரேகா யாதவ் 1988 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் பெண் ரயில் ஓட்டுனர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles