வைகை புயல் வடிவேலு தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவான். இவருடைய நகைச்சுவை பார்த்து பெரியவர்கள் முதல் குழந்தை வரை சிரிக்காதவர்களே இல்லை அந்த அளவிற்கு இவருடைய நகைச்சுவை சிரிப்பை ஏற்படுத்தும்.
வடிவேலு அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் என்டர் ஆகும் போது அவருடைய BODY LANGUAGE ஒரு தினுசா இருக்குமாம் அந்த அளவிற்கு ஜாலியான இருப்பாராம் வடிவேலு. அடுக்கடுக்காக ஒரு நேரத்தில் படங்களில் நடித்துக் கொண்டிருந்த வடிவேலு சில பிரச்சனை காரணமாக திரை உலகை விட்டு தள்ளி வைக்கப்பட்டார் வடிவேல்.
வடிவேலு அவர்களின் நகைச்சுவை இல்லாமல் தமிழ் சினிமாவில் வந்த நகைச்சுவை காட்சிகள் பெரிதாக ரசிக்கும் படி இல்லை. ஒரு நேரத்தில் வடிவேலு அவர்களின் நகைச்சுவையினால் மாபெரும் ஹிட் ஆன படங்களும் உள்ளது. சுமாரான படத்தில் கூட வடிவேலு அவர்களின் நகைச்சுவை பிரபலமாக பேசப்படும்.
பல வருடங்கள் சினிமாவிற்கு இடைவெளி விட்டு இருந்தார் ஆனால் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா விஜயின் மெர்சல் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் நடித்து இருந்தார் . தற்பொழுது சினிமாவில் மீண்டும் நடித்து வருகிறார் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த வருகிறார் வடிவேலு. அந்த படத்தை சுராஜ் இயக்குகிறார்.
அது மட்டும் அல்ல உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜ் படமான மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். உதயநிதி தந்தையாக நடிக்கிறார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
வடிவேலு ரசிகர்களுக்கு கூடுதல் குட் நியூஸ் என்னவென்றால் வடிவேலு அவர்கள் சந்திரமுகி 2 பி வாசு இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். சந்திரமுகி முதல் பாகத்தில் வடிவேலு செய்த சேட்டைகள் நகைச்சுவைகள் படத்தை சுவாரசியமாக கொண்டு சென்றது அதுபோல சந்திரமுகி பக்கம் 2 வடிவேலின் நகைச்சுவை அக்மார்க் நகைச்சுவைகள் மீண்டும் பார்க்கலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.
சந்திரமுகி 2 படத்தில் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் செய்யும் நகைச்சுவை சேட்டைகள் தளபதி விஜயின் சுறா படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சி அதை ரீ கிரியேட் செய்து வெளியிட்டு இருப்பது ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது.