சென்னை செங்கல்பட்டு திருவள்ளுவர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. சென்னையில் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து இருந்தது . இன்று ரெட் அலெர்ட் கொடுத்து சில மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவெடிக்கையும் எடுத்து இருந்தது தமிழக அரசு.
2 நாட்களாக கொட்டி தீர்த்த மழை ரெட் அலெர்ட் கொடுத்த இன்று பெரிய அளவில் இல்லை. சென்னைவாசிகள் முகத்தில் பெரிய சந்தோசத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மழை வந்த உடனே திமுக 4000 கோடி எங்கே என்று ஒரு பக்கம் கேள்விகள் சமூக ஊடகங்களில் கேலி செய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கி பல முன்னெச்சிரிக்கை ஏற்பாடுகளை சரியான குழுவுடன் ஆலோசனை பெற்று அதனை உடனே செயல்படுத்தி வந்தார்.
மழை தண்ணீர் தேங்கி நிற்கும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி மக்களின் தேவைகளை கேட்டறிந்து உடனே உதவிகளையும் செய்து உள்ளார்.
விமான சாகச நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி போல இன்னோரு தடவை நடக்க கூடாதுனு முன்னெச்சரிக்கையாக சிறப்பாக செயல்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்று உள்ளார் உதயநிதி.
குறிப்பாக x தளத்தில் இளைஞர் ஒருவர் தனது இருப்பிடத்தை சுற்றி தண்ணீர் சூழ்ந்து உள்ளது சரி செய்து கொடுங்கள் என்று உதயநிதிக்கு டேக் செய்து இருந்தார் உடனே உதயநிதி அந்த இளைஞரின் புகாரை விசாரித்து சரி செய்ய உத்தரவிட்டு உள்ளார். அது மட்டும் அல்லாமல் அந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு உள்ளார். மழை நேரத்தில் இரவும் பகலும் உழைத்த தூய்மை பணியாளர்களுக்கு நன்றியும் கூறி உள்ளார். சபாஷ் உதயநிதி.
உதயநிதி மக்களுக்காக எப்படி செயல்பட போகிறார் என்ன செய்கிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஆனால் மழை நேரத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கு கண்டிப்பாக அவரை பாராட்டலாம் என்பதே பல மக்கள் கருத்து.