உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று 93285 ஓட்டுக்கள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றவர்.

தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த உதயநிதி தனது தொகுதியில் கூட பிரச்சாரம் செய்யாமல் பிற தொகுதிகளில் திமுகவிற்கும் தனது தந்தைகாகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியடைய செய்தனர்.

அந்த நன்றியை கொஞ்சம்கூட மறக்காத உதயநிதி ஸ்டாலின் தான் வெற்றி பெற்ற நாளிலிருந்தே களத்தில் இறங்கி தனது தொகுதியில் வேலை செய்ய ஆரம்பித்தார். தனது தொகுதி மக்களுக்கு என்னவெல்லாம் குறைகள் என்று கேட்டு அறிந்து கொண்டு அந்தக் குறைகளை முடிந்த அளவு தீர்த்து வந்தார். சிலர் மின் வசதி சரியாக இல்லாமல் தவித்தனர் அவர்களுக்கு மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்தார் அந்த தொகுதியின் பொதுக்கழிப்பிடம் மோசமான நிலையில் இருந்தது அதனை பார்த்த உதயநிதி உடனே அந்த கழிவறையை சுத்தம் செய்ய உத்தரவிட்டு சுத்தம் செய்து கொடுத்தார்.

அதுமட்டுமல்லாமல் அந்த தொகுதியில் இருந்த அம்மா உணவகத்தில் நேரடியாக ஆய்வு செய்து அங்கு உள்ள உணவுகளை சாப்பிட்டு பின் உணவை கொஞ்சம் தரமாக தயாரிக்க சொன்ன உதயநிதி அங்குள்ள சமையலறைக்கு சென்று பார்வையிட்ட பின் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தார்.

தொகுதியில் ஒவ்வொருவர் வீட்டிற்கு சென்று குறைகளை கேட்டறிந்த உதயநிதி தொகுதி மக்களுக்கு இன்று வரை அயராமல் உழைத்து வருவது பெரிய ஆச்சரியம். சேப்பாக்கம் தொகுதி மக்களின் செல்லப் பிள்ளையாகவே உதயநிதி மாறிவிட்டார்.

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தொகுதி மக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கைகளை எந்நேரமும் தெரிவிக்க ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புகார் பெட்டி ஒன்றை வைத்துள்ளோம் அந்தப் பெட்டியில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களில் கூறப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னால் முடிந்தவரை முயற்சிகளை எடுப்பேன் என்று கூறியிருந்தார். முதல்வர் பட பாணியில் புகார் பெட்டி வைத்த உதயநிதியிடம் ட்விட்டர்வாசி ஒருவர் வாட்ஸ்அப் நம்பர் இருந்தால் மக்கள் குறைகளை உங்களுக்கு ஆடியோவாக அனுப்ப வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளார் அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தொகுதி மக்களுக்காக தனி மொபைல் ஆப் ஒன்று தயார் செய்து வருகிறோம், அதுபோல மிஸ் கால் ஹெல்ப்லைன் ஒன்றையும் உருவாக்கி வருகிறோம். வாட்ஸ்அப் சேவை அனைத்தும் விரைவில் வர இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

தொகுதிக்காக களம் இறங்கி வேலை செய்து வரும் உதயநிதியை கொண்டாடி வருகின்றனர் தொகுதி மக்கள். வாழ்த்துக்கள் உதயநிதி.