உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் திரைப்படத்தைப் பற்றி பேசி உள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமானார் அதுமட்டுமல்லாமல் அதற்கு முன்பே தளபதி விஜய்யின் குருவி திரைப்படத்தை ரெட் ஜெயின் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார் குருவி தான் அவர் தயாரிப்பில் வெளியான முதல் திரைப்படம். முதல் படமே பெரும் தோல்வியை சந்தித்தது.

அதன்பின் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல நல்ல படங்களை தயாரித்து பல வெற்றிகளை கண்டார் தற்போது அரசியலில் படு பிஸியாக இருக்கும் உதயநிதி தொடர்ந்து நல்ல நல்ல படங்களை வாங்கி அதனை வெளியிட்டும் வருகிறார் தற்போது அவருடைய கலக தலைவன் திரைப்படம் வெள்ளிக்கிழமை நாளை வெளியாக இருப்பதால் புரமோஷன் வேலைகளில் படு பிசியாக இருக்கும் உதயநிதி மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

அப்போது சிவகார்த்திகேயனின் திரைப்படத்தை நான் வாங்கினேன் படம் எப்படி இருக்கு என்பதைப் பார்ப்பதற்காக நானும் என் நண்பர்களும் வீட்டில் பார்த்தோம் யாருமே சிரிக்கவில்லை. நானும் நண்பர்களும் மூஞ்சி மூஞ்சி பார்த்துக் கொண்டோம் இதெல்லாம் காமெடி என்று எடுத்திருக்கிறார்கள் சிரிப்பு வருமா என்று நினைத்தோம் கடைசி 15 நிமிடம் நன்றாக படத்தை எடுத்திருந்தார்கள்.

நான் படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை கூப்பிட்டு படத்தின் நீளத்தை கொஞ்சம் ட்ரீம் பண்ணுங்க குறிப்பாக காலேஜ் காட்சிகளை கொஞ்சம் TRIM பண்ணுங்க என்று கூறியிருந்தேன் ஆனால் சிவா படத்தோட நீளத்தை அதிகரித்துவிட்டார் .

நீளத்தை குறைக்க சொன்னால் அதிகமாக்கி விட்டீர்கள் என்று கேட்டேன் இல்ல சரி இது ஒர்க் அவுட் ஆகும் என்று சிவா கூறினார் சரி என்று ஒப்புக்கொண்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் டான் படத்தை பற்றி கூறிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.