தமிழக அரசியல் திமுக அதிமுக இரண்டு கட்சிக்கு அடுத்ததாக தற்பொழுது பாஜக தமிழகத்தில் கால் பதித்து வருகிறது பாஜகவில் அண்ணாமலை அவர்களின் செயல்பாடுகளால் பிற கட்சிகள் சற்று ஆச்சரியத்தில் உள்ளார்கள் என்று சொல்லலாம்.
தாமரை மலரவே மலராது என்று நினைத்து வந்தவர்கள் மத்தியில் தாமரை மலர்ந்தே தீரும் விரைவில் தமிழ்நாட்டை ஆளப்போவது பாஜக தான் என்று அண்ணாமலை கூறி வந்தார். கட்சியின் வளர்ச்சிக்காக அண்ணாமலை பல ஆலோசனைகளை வழங்கி அதனை செயல்படுத்தியும் வருகிறார்.

அண்ணாமலை அவர்களை என்னதான் சோசியல் மீடியாவில் கலாய்த்து வந்தாலும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார் அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு வருகிறது அங்கு ஒரு செங்கல் தான் இருந்தது அந்த செங்கலையும் நான் எடுத்து வந்து விட்டேன் என்று கூறி பிரச்சாரத்தை கலகலப்பாக செய்தார்.

தற்பொழுது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கொடுத்த செங்கலை உதயநிதி திருடிட்டு வந்துட்டார் அந்த செங்கல் திருடனுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்கிறது என்று ஒரு செங்கலை காட்டிவிட்டு 11 மருத்துவக் கல்லூரிக்கு இதே போல ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல்களை அனுப்பி வைத்திருக்கிறோம்.

உதயநிதி அவர்களுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும் 3 வது தலைமுறையில் செல்வந்தராக பிறந்த அவருக்கு இதோட அருமை புரியாது என்னை போல உங்களைப் போல சாதாரணமாக வந்தவர்களுக்கு தான் கல்வியின் அருமை தெரியும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அத்துடன் இந்த செங்கல் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு செல்லும் என்று கூறியுள்ளார் அண்ணாமலையும் இந்த பேச்சு தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.