தமிழக சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் தவெக ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால் விஜய் 2 தொகுதிகளில் வென்றுள்ளதால், ஒரு தொகுதியில் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தவெகவின் எண்ணிக்கை 107ஆக குறையும். அப்படி பார்க்கும் போது, 11 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெக பக்கம் செல்லும் என்று கருதப்படுகிறது. ஆட்சியில் பங்கு என்று விஜய் அறிவித்துள்ளதால், விசிக, சிபிஐ மற்றும் . சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்










