Tuesday, September 8, 2026
-- Advertisement--

“ஆட்சி அமைக்க விஜய் அழைப்பு; விசிக, சிபிஐ, சிபிஎம் என்ன சொல்கின்றன?”

2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம்,2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதச்சார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் தவெக தலைவர் விஜய் ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளின்படி தவெக பெரும்பான்மைக்கு அருகாமையில் வந்துள்ள சூழலில், நிலையான ஆட்சியை வழங்க வேண்டி விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் தலைமைக்கு விஜய் தனித்தனியாகக் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு விஜய் கடிதம் அனுப்பி ஆதரவு கோரிய நிலையில், தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகளுக்கு விஜய் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது

நாளை ஆளுநர் அர்லேகர் சென்னை வரவுள்ள நிலையில், விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் அடுத்த சில நாட்களில் ஏற்படும் என்று தெரிகிறது. இன்னொரு பக்கம் தவெக தரப்பில் அதிமுக எம்எல்ஏ-க்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனை செங்கோட்டையன் மூலமாக விஜய் மேற்கொண்டு வருகிறார்.


Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles