தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்ட கான்வாய் வாபஸ் பெறப்பட்டதாக வெளியாகும் செய்தி தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்புப் பிரிவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த மூன்று நாட்களாக வழங்கப்பட்டு வந்த கான்வாய் வாகனங்கள் திடீரென திரும்பப் பெறப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இதனைத் தொடர்ந்து, மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், கட்சித் தலைவர் என்ற முறையிலும், சட்டமன்றத்தில் அதிக இடங்களைக் கொண்ட முக்கியத் தலைவர் என்ற ரீதியிலும் விஜய்க்கு அரசு சார்பில் நான்கு கான்வாய் வாகனங்கள் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது என்ற பரபரப்பான சூழல் நிலவும் வேளையில், தவெக தலைவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புத் திரும்பப் பெறப்பட்டது ஒரு முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
வரும் நாட்களில் புதிய அரசு அமைவது குறித்த முடிவுகள் தெளிவாகும்போது, விஜய்க்கான பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் குறித்த தெளிவான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது










