கொரானோவால் பல பொதுக்கூட்டங்கள் சேரும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. தியேட்டர்கள், விளையாட்டு மைதானங்கள் மூடப்பட்டுள்ளன. பொது நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.
அதுபோல கோயில்களும் மக்கள் உள்ளே வர அனுமதி இன்றியுள்ளன. இந்நிலையில் மிகுந்த கூட்டமும் பல கோடி வருவாய் ஈட்டித்தரும் கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இக்கோயிலில் சமீப காலமாக ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லை.
அது போல கோயிலும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் திருப்பதி லட்டு மட்டும் விற்பனைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஒருவருக்கு ஒரு லட்டு என்று கணக்கு இல்லாமல் எவ்வளவு வேணாலும் வாங்கிக் கொள்ளலாம். இந்த விற்பனை திருப்பதியை தவிர சென்னை போன்ற பிற மாநகரங்களிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லட்டின் விலையையும் ஏற்றவும் அரசு முடிவெடுத்துள்ளது.