தளபதி விஜயின் கோட் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒரே வாரமே இருக்கும் இந்நிலையில் கோட் படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துள்ளனர் படக் குழு.
திரைப்படத்தின் 4 வது SINGLE நாளை வெளியிட உள்ளார்கள். இந்நிலையில் இந்த பாடல் குறித்து இப்போதே எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருக்கு. காரணம் இந்த பாடல் ஒரு பார்ட்டி சாங் அது மட்டும் அல்ல இளையதளபதி விஜய்கான பாடல் இது. செம குத்து பாடலாக இருக்கும்னு செய்திகள் வெளிவரும் நேரத்தில் மேலும் ஒரு சர்ப்ரைஸ் தகவலும் வந்து உள்ளது.
மட்ட என்ற 4 வது சிங்கிள் பாடலில் த்ரிஷாஒரு கௌரவ தோற்றத்தில் வருவதாகவும் விஜய்யும் த்ரிஷாவும் சேர்ந்து ஆடி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரசிகர்களின் favorite ஜோடி மீண்டும் ஒரு பாடலுக்கு இணைந்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தி உள்ளது.