தமிழ்நாடு அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவரது மகள் நிலா தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
டெல்லியில் நடந்த 66 வது தூப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்ட TRB ராஜா அவர்களின் மகள் நிலா தேசிய அளவில் தங்கம் வென்றார். தன் மகள் தங்கம் வென்ற இந்த சந்தோஷமான செய்தியை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு தனது சந்தோசத்தை வெளிப்படுத்தினர் TRB ராஜா.
இன்று தமிழகம் திரும்பிய TRB ராஜாவின் மகளுக்கு தமிழக அரசு சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தியாளர்களை பார்த்து பேசிய நிலா எனக்கு பயிற்சி கொடுத்தவர்களுக்கு ரொம்ப நன்றி இந்த போட்டிக்கு ஒத்துழைத்த எனது பழிக்கு நன்றி CM தாத்தாவும் உதய் மாமாவும் வெற்றி பெற்ற பின் பேசினாங்க ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. தேசிய தரத்தில் தூப்பாக்கி பயிற்சி கொடுக்கும் மையம் சீக்கிரம் தமிழ்நாட்டில் தொடங்கலாம் என்று கூறினார் உதய் மாமா என்று கூறிவிட்டு அனைவர்க்கும் நன்றி தெரிவித்தார் நிலா.
தமிழ்நாட்டிற்கு இரண்டாவது தடவையாக தங்கம் பெற்று கொடுத்த சிங்கப்பெண்ணை சந்தோசத்துடன் வரவேற்றார்கள் பெற்றோர்கள் மற்றும் மக்கள்.