தமிழ்நாடு முழுவதும் வானிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி இருக்கையில், தூத்துக்குடியில் இன்று சூறாவளி ஒன்று வானத்திலிருந்து இறங்கி வந்து தரையை தொட்டிருக்கிறது. இப்படியான வித்தியாசமான நிகழ்வை இதற்கு முன்னர் அப்பகுதி மக்கள் யாரும் பார்த்ததே இல்லை.
இன்று மதியம், தூத்துக்குடி மக்கள் அதிசயமான ஒரு விஷயத்தை பார்த்தார்கள். கருப்பு நிறத்தில் மேகம் புனல் வடிவத்தில் சுழன்றுக்கொண்டே தரையை நோக்கி வந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.
இதை ‘டொர்னடோ’ என்று சொல்வார்கள். அமெரிக்காவில் இப்படி அடிக்கடி நடக்கும். இந்த புனல் வடிவ மேகம் தரையை தொடும் இடத்தில் ஓட்டு வீடுகள், கூரை வீடுகள் இருந்தால் மொத்தமும் காலி.. ஆனால் தூத்துக்குடியில் அவ்வளவு பலம் வாய்ந்த டொர்னடோ வீசவில்லை. அந்த வகையில் மக்கள் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பியிருக்கின்றனர்.
தூத்துக்குடியில் இதற்கு முன்னர் இப்படி நடந்தது கிடையாது. இதுதான் முதல் முறை மட்டுமல்லாது.. இது அரிதான நிகழ்வு என்றும் கூறுகிறார்கள். பார்க்க நல்லா இருந்தாலும், மொட்டை மாடியிலிருந்தோ, திறந்த வெளியிலிருந்து இதை பார்க்க வேண்டாம். உடனடியாக கான்கிரீட் கட்டிடங்களுக்குள் செல்வது பாதுகாப்பானது.










