ஜூன் மாதம் இறுதி வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்கள் கூட்டம் பெருமளவில் குவிந்து வருகின்றனர்.
தற்போது திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிவதால், பக்தர்கள் தரிசன வரிசையில் கிலோமீட்டர் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
டோக்கன் இல்லாதவர்கள் ஏழுமலையானைத் தரிசிக்க சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.விரைவு தரிசனம் கிட்டத்தட்ட 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகிறது.பாமர பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கோடைக்காலம் முடியும் வரை கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சிபாரிசு கடிதங்களின் அடிப்படையில் வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசனம் (VIP Break Darshan) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. (தன்னார்வ விஐபிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு).
கோடை வெயிலின் தாக்கம் மற்றும் கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, பக்தர்கள் தங்களது திருப்பதி பயணத்தைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, முன்கூட்டியே தரிசன டிக்கெட் பதிவு செய்தவர்கள் மட்டுமே தடையற்ற தரிசனத்தைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.










