Friday, October 16, 2026
-- Advertisement--

ஏர் கூலரில் கூலிங் கம்மியா வருதா!! சுத்தம் செய்வது எப்படி?

ஏர் கூலர்களில் காற்றோட்டம் தடைப்பட்டால் அல்லது கூலிங் பேட்களில் தூசி மற்றும் உப்பு படிமங்கள் சேர்ந்தால் அதன் குளிர்விக்கும் திறன் குறைய செய்யலாம்.எனவே, கூலிங் பேட்களைத் தொடர்ந்து சுத்தம் செய்வதும், தண்ணீர் சுழற்சி சீராக இருப்பதை உறுதி செய்வதும் மிகவும் அவசியமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.முறையான பராமரிப்பு ஏர் கூலரின் குளிர்ச்சியை அதிகரிப்பது மட்டுமின்றி மின்சாரத்தை கணிசமாக சேமிக்கவும் உதவும்.

முதலில் பழைய தண்ணீரை வெளியேற்ற வேண்டும். நீண்ட நாட்களாக தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் கெட்ட வாடைக்கு வழிவகுக்கும்.அடுத்து, குளிரூட்டும் பட்டைகளை கழற்றி சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

அவை அழுக்காக இருந்தால், தண்ணீரை சரியாக உறிஞ்சாது. குளிர்ச்சியான காற்றும் அளிக்க செய்யாது.பிறகு டேங்க்-ஐ மென்மையான பிரஷ் கொண்டு சுத்தம் செய்யவும்.இது கெட்ட வாடை நீக்குவதோடு காற்றின் தரத்தை மேம்படுத்தும்.

பம்ப் சரியாக வேலை செய்கிறதா மற்றும் தண்ணீர் எடுத்துசெல்லும் குழாயில் அடைப்பு இருக்கா என்றும் சரிபார்க்க வேண்டும். மேலும் ஃபேன் பிளேட்-வும் துடைக்க வேண்டும். அழுக்கு இருந்தால் காற்றோட்டம் தடைப்படும்.

இறுதியாக குளிரூட்டும் பட்டைகள் நன்றாக உலர்ந்த பிறகு மீண்டும் பொருத்திவிட்டு பிரஷ் வாட்டரை நிரப்ப வேண்டும்.கோடையில் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இப்படி சுத்தம் செய்தால், ஏர் கூலர் சிறப்பாக வேலை செய்யக்கூடும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles