தற்போது ஊரடங்கு காலத்தில் சோஷியல் மீடியாக்கள் மிகவும் மக்களிடையே பிரபலமடைந்து வருகின்றன. பலரும் அதனை உபயோகித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக tik .tok மோகம் அனைவரிடத்திலும் எழுந்து வருகிறது. டிக் டாக் மூலம் தன் நடிப்புத் திறனை பலரும் வெளிப்படுத்துகின்றனர். இதன் மூலம் பிரபலமடைந்தவர் 16 வயதான நடிகை சியா சர்க்கார்.
இவர் இவருக்கு 11 லட்சத்திற்கும் மேலான பாலோவர்ஸ் சமூக வலைத்தளத்தில் உள்ளனர். மிகவும் ஃபேமஸ் ஆக இருக்கும் பொழுது இவர் தற்கொலை செய்து கொண்டது மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுபற்றி அவரது மேலாளர் அர்ஜுன் கூறிய தகவல் இந்த மரணம் ஒரு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இருக்கலாம், பணி சம்பந்தமாக அவர் மிகவும் நிறைவாக இருந்தார், சில நாட்களுக்கு முன்னர் கூட புதிதாக ஒரு பணி குறித்து நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம், மிகவும் திறமையானவர் என்று அவர் கூறினார். சில நாட்களுக்கு முன் தான் பாலிவுட் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். தற்போது சியா தற்கொலை செய்து கொண்டதும் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.