Thursday, September 10, 2026
-- Advertisement--

குரு பெயர்ச்சி 2025 2027 – துலாம் ராசிக்கு எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கோங்க!

துலாம் ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம்

கால், வயிறு பிரச்சனையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் அற்புதம் ஒன்பதாம் இடத்தில் குரு இருக்கிறார் அஷ்டமத்தில் இருந்து குரு ஒன்பதுக்கு செல்கிறார் ஒன்பதாம் இடத்திற்கு வந்து உங்களை ஐந்தாம் பார்வையாக பார்ப்பார் இதே போல்தான் ஒரு வருடத்திற்கு தொடரும். ஆறில் சனி இரண்டு வருடத்திற்கு இருக்கப் போகிறார் பூர்வ பயணத்தில் ராகு இருந்தாலும் குரு பார்ப்பார். அதனால் அபிராமி அந்தாதியில் 40 59 75 படிக்கக்கூடிய ராசியில் துலாம் ராசி காரர்கள் இருப்பதால் எதிர்பார்க்காத நல்லதெல்லாம் நடக்கும்.

பெரியவருடைய காரியங்களில் மட்டும் சிறிது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வேறு எந்த விஷயமும் உங்களுக்கு பாதிப்பு கிடையாது துலாம் ராசிக்காரர்கள் திருமணம்ம செய்து கொள்ளவில்லை என்றால் செய்து கொள்ளலாம். குழந்தை பெற்றுக் கொள்ளலாம். திருமணம் செய்துவிட்டு எனக்கு பிரச்சினை இருக்கிறது என்றால் குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் நிம்மதியாக இருக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்தி வரும்.

குடும்பத்தை விட்டு தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளலாம் குடும்பத்தாருடன் பயணங்கள் மேற்கொள்ளலாம். வீடு வாங்குவது, நிலம் வாங்குவது மனிதனுக்கு இருக்கக்கூடிய அஷ்டலட்சுமி கடாட்சம் எல்லாமே கிடைக்கக்கூடிய நேரம் தான் துலாம் ராசிக்காரர்களுக்கு. யோசித்துக் கொண்டே இருந்தால் வேலை எதுவும் ஆகாது.

அலர்ஜி போன்ற பிரச்சனைகளை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் தான் உங்களுக்கு பிரச்சனை வரும் சனி உச்சம் பெறக்கூடிய ராசி அதனால் உடற்பயிற்சியை மட்டும் மறக்காமல் செய்ய வேண்டும். பெரிய அளவு பாதிப்பிலிருந்து கண்டிப்பாக விடுபடலாம். துலாம் ராசிக்காரர்கள் உடற்பயிற்சி செய்தாலே 91% அவர்களுக்கு நல்லதாகும். ஆலங்குடி குரு ஸ்தலம் மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தித் தரும் இந்த சமயத்தில் திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம்.

பரிகாரம்

தென்கொடி திட்டை ராஜகுரு ரொம்ப நல்லது அற்புதமான அமைப்பை தரும் 50 கிராம் நல்லெண்ணெய், 50 கிராம் பசு நெய், 50 கிராம் விபூதி, 50 கிராம் குங்குமம், கோயிலில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஏதாவது உங்களால் முடிந்த உதவி அற்புதமான அமைப்பை தரும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles