Saturday, October 10, 2026
-- Advertisement--

திருவள்ளூர் தொழிற்சாலை விபத்து எதிரொலி.. அமோனியா கசிவு குறித்து அமைச்சர் விளக்கம்

திரு​வள்​ளூர் மாவட்​டம் கன்​னிகைப்​பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்​படுத்​தும் தனி​யார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்​பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

திரு​வள்​ளூர் மாவட்​டம் ஊத்​துக்​கோட்டை வட்​டம் பெரியபாளையம் அடுத்த கன்​னிகைப்​பேர் பகு​தி​யில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்​களை பதப்​படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்​றுமதி செய்​யும் ‘செ​யின்ட் பீட்​டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனி​யார் நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. சென்னை வண்​ணாரப்​பேட்​டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வரு​கின்​றனர்.

இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்​களில் 200-க்​கும் மேற்​பட்ட வடமாநிலத் தொழிலா​ளர்​கள் தங்கி வேலை செய்து வரு​கின்​றனர். நேற்று காலை வழக்​கம்​போல சுமார் 120 தொழிலா​ளர்​கள் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, குளிர்​சாதனப் பிரி​வில் பயன்​படுத்​தப்​படும் அமோனியா வாயு கசிந்​துள்​ளது. சில நிமிடங்​களில் தொழிற்​சாலை முழு​வதும் வாயு பரவிய​தால் தொழிலாளர்களுக்கு மூச்​சுத் திணறல், கண் எரிச்​சல் ஏற்பட்டுள்ளது.

இதில் 60 பெண்​கள், 5 ஆண்​கள் என மொத்​தம் 65 தொழிலா​ளர்கள் மயக்கம் அடைந்​தனர்.இதனயைடுத்து திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.  மேலும், 10-க்கும் மேற்பட்டோர் இன்னும்கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles