கொரானோ என்னும் வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் கொரானாவிலிருந்து மீள சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் இந்நோய் தொற்று பரவாமல் இருக்க இந்தியா அரசு அனைவரையும் வீட்டிலேயே இருக்க சொல்லி வலியுறுத்தி 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் நாடெங்கும் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர்.
ஆனால் சிலர் இதை பொருட்படுத்தாமல் வீட்டை விட்டு வெளியே ஊர் சுற்றி திரிவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சினிமா பிரபலங்கள் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகை மீனாவின் மகளும், தெறி படத்தில் நடித்த பேபி நைனிகா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.