வாரிசு திரைப்படம் கொடுத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சஞ்சய் தத் போன்ற மாபெரும் பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
தற்பொழுது லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது விஜய் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான டைட்டில் லுக் வித்தியாசமாகவும் படு மாஸாக இருந்ததால் ரசிகர்கள் பெரிய அளவில் LEO திரைப்படத்தினை எதிர்பார்த்து வருகின்றனர்.
ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்களும் வெளிவந்து கொண்டே கையில் லியோ படத்தில் கெட்டப் பற்றி ரகசியமாகவே வைத்து வந்தது படக்குழு. காஷ்மீரில் லியோ படத்தின் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கையில் விஜய் லுக்கை யாரோ ஒருவர் இணையத்தில் வெளியிட்டிருந்தார்.
லியோ திரைப்படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் அதுபோல விஜய்க்கும் திரிஷாவிற்கும் லியோ திரைப்படம் 67வது திரைப்படமாக அமைந்துள்ளது. கமலஹாசன் லியோ படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.மேலும் மே 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதோடு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நடக்க உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#Leo shooting update !!
— AmuthaBharathi (@CinemaWithAB) April 26, 2023
– Next schedule will happen on May 1st week at Chennai🎥
– It will be a 1 month long schedule ⏳
– Important portions between #ThalapathyVijay, #Trisha & #SanjayDutt will be Filmed on that schedule 🤜🔥🤛 pic.twitter.com/fqJlYEPYmG