Wednesday, December 4, 2024
-- Advertisement--

ஏழு வயதில் ஐஸ்கிரீமால் கடத்தப்பட்ட சிறுமி..!!! ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா அப்பா உடன் சேர்ந்தார்.!!

எவ்வளவுதான் தன் குழந்தையை பாதுகாப்பாக வளர்த்து வந்தாலும் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தைக்காணாமல் போவது இன்னும் நடந்து வருகிறது. அந்த இழப்பை யாராலும் ஈடுகட்ட முடியாது.அதுபோல தன் ஏழு வயதில் காணாமல் போன சிறுமி ஒன்பது வருடங்கள் கழித்து தற்போது தாய் தந்தையுடன் இணைந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் உள்ள அந்தேரி பகுதியைச் சேர்ந்தவர் பூஜா. இவர் கலந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் பள்ளிக்கு செல்லும் பொழுது காணாமல் போய் உள்ளார். அப்பொழுது அவர் ஒன்றாம் வகுப்பு படித்துள்ளார். ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து பூஜாவை கடத்தி உள்ளனர் அந்த கொள்ளையர்கள்.

parmila

பூஜாவை கடத்தியவர்கள் வேலைக்கு பூஜாவை ஒரு இடத்தில் வைத்துள்ளார். அந்த இடத்தில் தான் 30 வயதான பிரமிளா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். பிரமிளாவிடம் நெருக்கமாக உள்ள பூஜா எப்படியாவது உண்மையை கூற வேண்டும் என்று ஒரு வரவைத்து கொண்டு நான் சிறு வயதில் கடத்தப்பட்டுள்ளேன். இங்கு உள்ளவர்கள் என் உண்மையான பெற்றோர்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரமிளா இவர்களுக்கு எப்படியாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார்.

பூஜா youtube இல் வரும் ஒரு ஜோடியை பார்த்து இவர்கள் தான் என் அம்மா அப்பா என்று கூறியுள்ளார். அவர்களின் நம்பரை எப்படியாவது வாங்க முயற்சித்த பிரமிளாவிற்கு ரபீக் என்பவரின் நம்பர் கிடைத்துள்ளது. ரஃபிக் என்பவர் பூஜாவின் பெற்றோர் வீட்டிற்கு அருகில் உள்ளவர்.

அதன் பிறகு ரஃபிக் ஒரு நாள் வீடியோ கால் போட பூஜாவும் அவரது தாயாரும் வீடியோ காலில் பேசியுள்ளனர் பார்த்த கணமே இருவரும் கதறிய அழுது அன்பை பரிமாறி உள்ளனர்.

இருப்பினும் பூஜாவின் அம்மாவிற்கு 9 ஆண்டுகளுக்கு முன் தன் மகள் காணாமல் போனது உண்மைதான். ஆனால் இவள் தான் என் மகள் என்பதில் சந்தேகம் உள்ளது, நிஜமாகவே தன் மகள் தானா என்று சந்தேகம் இருவருக்கும் இருந்துள்ளது.

இருப்பினும் பூஜா இருக்கும் இடத்தை நோக்கி பூஜாவின் உண்மையான தாய் மற்றும் சகோதரர்கள் வந்துள்ளனர். அவளின் அடையாளத்தை கண்டு கொண்ட பிறகு இவர்தான் என் உண்மையான மகள் என்பதை அறிந்து கொண்டார் .

அதன் பிறகு அங்கிருந்து அவளை மீட்டு தாயுடனே சேர்ந்துள்ளார் பூஜா.
ஏழு வயதில் பூஜா எப்படி கடத்தப்பட்டார் 9 வருடங்களாக எப்படி அவர் இருந்தார் என்று கூறும்பொழுது ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தேன் கடத்தி வந்தவர்களுக்கு ஒரு மகள் பிறந்த பிறகு என்னை மிகவும் கொடுமைப்படுத்த ஆரம்பித்து விட்டனர். சப்பாத்தி கட்டை ,பூரி கட்டை போன்றவற்றால் என்னை அடிப்பதால் எனக்கு பல நேரங்களில் ரத்தம் வரும் என்றும் மிகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

தற்பொழுது பூஜாவின் குடும்பத்தினர் கடத்தப்பட்டவர்களின் மீது புகார் அளித்துள்ளனர். ஏழு வருடங்களுக்குப் பிறகு தன் தாயை சந்தித்த பூஜா தற்பொழுது மனநிம்மதி அடைந்து தன் தாயுடன் நலமாக வாழ்ந்து வருகிறார்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles