பொதுவாக குழந்தை பிறந்த பிறகு சத்தமாக அழுவும். அதை வைத்துக் கொண்டே குழந்தை நன்றாக பிறந்துள்ளது என அனைவரும் அறிந்து கொள்வோம்.
இதுவரை உலகிலேயே நடக்காத அதிசயம் ஒன்று காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள சின்ன அழிச்சூர் என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் -லதா தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. லதா ராஜேந்திரன் தம்பதிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் இருக்கும்போது, இரண்டாவதாக கர்ப்பமான லதாவிற்கு எட்டாவது மாதத்தில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரை உடனடியாக அட்மிட் செய்துள்ளனர்.
அங்கு அவருக்கு உடனடியாக பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது
2.9 கிலோ எடை உள்ள ஆண் குழந்தை லதாவுக்கு பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த உடனேயே “நான் வந்துட்டேன்” என்ற குரல் அனைவர் காதிலும் விழுந்து உள்ளது.
இந்த “நான் வந்துட்டேன்” என்று குரல் ஒரே மாதிரியாக குழந்தை பேசுவது போன்று அனைவருக்கும் இருந்துள்ளது. வேறு யாரும் அந்த இடத்தில் இல்லை என்பதால் குழந்தை தான் பேசியிருக்கும் என்று அனைவரும் கூறியுள்ளனர்.
இதனால் அந்த குழந்தை அந்த ஊர் மக்களிடையே பிரபலமாகி உள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கேட்கையில் எந்த குழந்தை பிறந்த உடனே பேசி உள்ளது, பொதுவாக ஒரு குழந்தை வளர்ந்து பேச குறைந்தது நான்கு வருடங்கள் ஆவது ஆகும் இப்படி இருக்கையில் குழந்தை பிறந்தவுடன் பேசியது என்பது முற்றிலும் பொய்யான வதந்தி. அந்த குழந்தையின் சினுங்கள் தான் அப்படி அனைவருக்கும் கேட்டுள்ளது.
இருப்பினும் அந்த ஊர் மக்கள் இதை நம்புவதாக இல்லை, அது எப்படி அனைவருக்கும் ஒரு சினுங்கள் சத்தம் ஒரே மாதிரியாக கேட்கும். குழந்தை தான் பேசி உள்ளது என கூறி வருகின்றனர்.