Thursday, September 10, 2026
-- Advertisement--

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘29’-மே 8 வெளியீடு!!!

’29’ திரைப்படம் மே 8-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள படம் ‘29’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இப்படம் மே 8-ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் ப்ரோமோ வீடியோ உடன் அறிவித்துள்ளனர். தமிழக தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவியேற்ற உடன் இப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரத்னகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க காதலை மையப்படுத்தி இப்படம் உருவாகி இருக்கிறது. இதற்கு ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இதுவரை வெளியான பாடல்கள் அனைத்துமே இணையத்தில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன.

விரைவில் ட்ரெய்லரை வெளியிட்டு, படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles