Tuesday, September 8, 2026
-- Advertisement--

மலையாள திரைப்படம்  செய்துள்ள பெரிய வசூல் சாதனை!!!

மலையாள சினிமாவின் ‘பேட்ரியாட்’ திரைப்படம் மே 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவான இந்த படம், பிரம்மாண்டமான நட்சத்திர அணியால் வெளியீட்டுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இதில் மோகன்லால், மம்மூட்டி, நயன்தாரா, பகத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் மற்றும் ரேவதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.முதல் நாளில் உலகளவில் சுமார் ரூ.30 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இந்த ஆண்டின் முக்கியமான ஓப்பனிங் வசூல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.குறிப்பாக பல முன்னணி நடிகர்கள் ஒரே படத்தில் இணைந்திருப்பது, படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

முதல் நாளிலேயே வலுவான தொடக்கத்தை பதிவு செய்துள்ளதால், வரும் நாட்களில் மேலும் பெரிய வசூல் சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles