Wednesday, April 24, 2024
-- Advertisement--

இயக்குனர் நெல்சனால் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட்…!!! சிவாவின் நீண்டநாள் கனவு நிறைவேறியது.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது. நெல்சன் திலிப்குமார் விஜய்யை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 169 படத்தை இயக்க உள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடப்பட்டது. இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 169 என்ற படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்தநிலையில் ரஜினிகாந்த் நடக்க உள்ள 169 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரஜினிக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

\ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் நீண்ட நாள் கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறும் என கூறப்பட்டுள்ளது. இயக்குனர் நெல்சன் இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவை பூர்த்தி செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.

இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த தகவலை குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles