Tuesday, June 18, 2024
-- Advertisement--

விஜயுடன் கூட்டணி வைக்கப்போகும் கட்சி…!!! பரபரப்பாகும் அரசியல் களம் 2026ஐ கூறி வைக்கும் விஜய்…!!! அடுத்து என்ன தெரியுமா..?

TVK கட்சித் தலைவர் தளபதி விஜய் அவர்கள் கட்சி ஆரம்பித்ததில் இருந்து சைலன்டாக இருக்கிறாரே, வாழ்த்து மட்டும் தனது எக்ஸ் தளத்தில் போட்டு வருகிறாரே ஆக்ஷனில் இறங்குவாரா என்று சிலர் பல கேள்விகளை எழுப்பி வரும் இந்த நேரத்தில் விஜய் GOAT படப்பிடிப்புக்கு பிறகு குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தனது அரசியல் பயணத்திற்கு மும்மரமாக தயாராகி விட்டார் அவருக்கு அரசியல் எதிரியே திமுக தான் என்ற செய்தியும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ள விஜய் அந்த திட்டங்கள் சரியாக நடக்கிறதா அல்லது அறிமுகப்படுத்தியதோடு அமைதியாக இருக்கிறதா என்று ஆராயவும் தொடங்கி விட்டாராம். விலையில்லா உணவு, இலவச ஆம்புலன்ஸ், இலவச படிப்பகம் மற்றும் சட்ட ஆலோசனை மையம் போன்றவற்றை விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பே தொடங்கியுள்ளார். விரைவில் முதியவர்களுக்கு உதவும் வகையில் முதியோர் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்து உள்ளதாக தகவல்.

விஜயின் TVK கட்சியின் முதல் மாநாடு பெரிய அளவில் நடத்த திட்டமிட்டு உள்ளனர். மதுரையில் சைலண்டாக இடம்பார்த்து வருவதாகவும் செய்தி. விஜயின் அரசியல் பிரவேசத்தை உற்று நோக்கி வருகிறது பிற கட்சிகள். யாருடன் கூட்டணி வைப்பார் என்ற ஆவல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த தகவலும் வெளிவந்து உள்ளது.

நமக்கு கிடைத்த தகவலின் படி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்களுடன் விஜய் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. சீமான்-விஜய் சந்திப்பு சமீபத்தில் நடந்ததாகவும் செய்திகள் ஒரு பக்கம் வருகிறது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியது “எந்த ஒரு அறிவிப்பாக இருந்தாலும் அது எங்கள் தலைவர் விஜய் அறிவிப்பார்” என்று கூறி மழுப்பினர்.

ஒரு வேலை விஜய் சீமான் கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும். விஜய் யாருடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என்பதை கமெண்ட் செய்யுங்க மக்களே.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles