முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் என்ற செய்தி நேற்று பிற கட்சிகளுக்கு ஹாட் டாபிக் ஆக அமைந்தது.
ஏற்கனவே பிற காட்சிகள் அதனை சுட்டிக்காட்டி பல விவாதங்கள் செய்து வரும் நிலையில் நடிகரும் மற்றும் TVK கட்சியின் தலைவருமான தளபதி விஜய் அவர்கள் நேற்று இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் இந்த செயலை பற்றி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். விஜய் அறிக்கைக்கு பின் இது சோசியல் மீடியாவில் பெரும் அளவிற்கு பேசும் பொருளாக அமைந்தது.
அறிக்கையில் ED மேல் உள்ள பயத்தால் தான் முதல்வர் டெல்லி பயணம் செய்ததாகவும், பிரதமர் மோடியை சந்தித்து ED குறித்து பேசவில்லை என்று மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பிஉள்ளார்.
TASMAC விவகாரத்தில் 1000 கோடி ஊழல் தோண்டி எடுத்துவிட்டால் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை காரணமாக வைத்து கொண்டு மோடியை சந்தித்து உள்ளார்.
அந்த புகைப்படத்தை உற்று நோக்கினாலே போதும் பூனை குட்டி வெளியே வந்தது தெரியும் என்று விஜய் உள்ளார்.
விஜயின் திடீர் அறிக்கை குறித்து துரைமுருகன் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ” அவர் முழுதாக முதலில் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலில் அவர் பச்சா” என்று கூறினார். இதனை தொடர்ந்து சேகர் பாபு அவர்கள் கூறியிருப்பது நேற்று முளைத்த காளான் அவர். ரோடு ஷோ செய்துவிட்டு போகும் ஆள் இல்லை எங்கள் முதல்வர். முதல்வர் அவர்கள் நிலுவையில் உள்ள கல்வி தொகையை கேட்க தான் சென்று இருந்தார் கூறி உள்ளார்.
இந்நிலையில் EDக்கும் பயம் இல்லை மோடிக்கும் பயம் இல்லை என்று உதயநிதி அவர்கள் பேசிவருகிறார்.