Friday, April 19, 2024
-- Advertisement--

விஜயின் வாரிசு திரைப்படம் இந்த இந்த திரைப்படங்கள் போல இருக்கும் அப்டேட் கொடுத்த சரத்குமார்…!!!

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு இந்த படத்தை கார்த்தியின் தோழா என்ற படத்தை இயக்கிய வம்சி என்பவர் இயக்கி கொண்டிருக்கிறார். விஜய்க்கு சகோதரராக நடிகர் ஷாம் நடிக்கிறார். சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, சங்கீதா கிரிஷ், பிரபு, குஷ்பூ என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக நேஷனல் கிராஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தன்னா நடிக்கிறார்.

வாரிசு திரைப்படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்களிடம் இருந்து வருகிறது. விஜயின் பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் ஒரு முழுமையான விஜய் படமாக இல்லை என்பது தான் உண்மை அதனால் மனம் நொந்து போன விஜய் ரசிகர்கள் தளபதி விஜய்யின் அடுத்த படமான வாரிசை வரவேற்க தயாராக உள்ளனர்.

வாரிசு திரைப்படம் 2023 பொங்கலன்று வெளியாக உள்ளது இந்நிலையில் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சரத்குமார் பிரபல டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் அப்போது வாரிசு திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை கூறியுள்ளார்.

வாரிசு திரைப்படம் ஒரு இன்ட்ரஸ்ட் ஆன எமோஷனல் படமாக அமையும். எப்படி ஒரு சூரிய வம்சம் எல்லாராலும் ஏற்று கொல்லப்பட்டதோ எப்படி ஒரு நாட்டாமை திரைப்படம் மக்களால் ஏற்றுக் கொல்லப்பட்டதோ எப்படி ஒரு சின்ன கவுண்டர் விஜயகாந்த் சார் படம் மக்களிடம் பெரிய கொண்டாடப்பட்டதோ அதுபோல பார்வையாளர்களை ஈர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த படமாக இந்தப் படம் அமையும் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

இந்தப்படத்தில் எமோஷனல் இருக்கும் நல்ல பாடல்கள் இருக்கும் ஃபைட்டு இருக்கும் விஜயோட எல்லாமே இருக்கும் எனக்கு கதை முழுமையாக தெரியும் என்பதால் நிச்சயம் இது அனைவரையும் கவரும் படமாக இருக்கும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

கூடுதல் தகவலாக சூரிய வம்சம் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்க உள்ளதாக கூறி உள்ளார் சரத் குமார்.

மாலத்தீவில் பிரபல நடிகை காட்டிய தாராளம்…!!! வைரல் ஆகும் பிகினி புகைப்படங்கள்.

 

இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்…!!! திடீர் என்று வெளியான புகைப்படங்கள்.

 

சமந்தா நாகசைத்னயா விவாகரத்திற்கு இந்த பிரபல நடிகர் தான் காரணமாம்…!!! இவரா இப்படி செய்தார்..?

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles