பொங்கல் விருந்தாக தல அஜித்தின் துணிவுபடவமும் தளபதி விஜயின் வாரிசு படமும். இரண்டும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது வாரிசு படத்தின் விமர்சனங்கள் ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஒரு குடும்ப கதையை பின்னணியாக வைத்து எடுத்துள்ள வாரிசு படம் படத்தை இயக்கியவர் தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சி. இதுல ஆக்ஷன் விஜய்யும் இல்லை, மாஸ் விஜய்யும் இல்லை என்று கூறலாம்.

கதையின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலை தவிர மற்ற எந்த இடத்திலும் மனதில் நிற்கவில்லை.

சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ என பல நட்சத்திர பட்டாளங்கள் வாரிசு படத்தில் நடித்திருப்பதால் படம் ஒரு பக்கா என்டர்டைன்மெண்டாக இருக்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு இருந்தனர்.

ஆனால் அந்த எதிர்பார்ப்பு குறைந்த சதவீதமே பூர்த்தி செய்துள்ளார் இயக்குனர் வம்சி. அட்லீஸ்ட் விஜய்யை ஒரு மாஸ் ஹீரோவாவது காட்டி இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். படம் முழுக்க முழுக்க ஒரே செண்டிமெண்ட் நிறைந்திருப்பதும் ஒரே வீட்டை சுற்றி காட்சிகள் நகர்வதும் கிட்டத்தட்ட சீரியல் பார்ப்பது போன்று இருப்பது எனவும் கருத்துக்கள் வெளிவந்து உள்ளன.


விஜய் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திப்படுத்தவில்லை என்றாலும் குடும்பங்கள் பொங்கல் தினத்தில் ஒன்றாக வந்து படத்தை பார்த்து ரசிப்பது போல உள்ளது வாரிசு திரைப்படம்.

எது எப்படியோ வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றுவிடும். ஆனால் ரசிகர்களை ஏமாற்றி விட்டது வாரிசு.