Thursday, February 19, 2026
-- Advertisement--

அவசரமாக டெல்லி பறந்த விஜய்…!ஏர்போர்ட்டில் ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த செய்கை..!!!

தளபதி விஜயின் அரசியல் நகர்வுகள் தொடர்ந்து உற்றுநோக்கப்பட்டு வரும் நிலையில், அவர் நடிப்பில் கடைசியாக வெளிவர உள்ளதாக கூறப்படும் “ஜனநாயகன்” திரைப்படம் தொடர்பான தடைகள், விஜயை மனஅழுத்தத்தில் ஆழ்த்தியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான CBI விசாரணை குறித்து, பொங்கலுக்கு முன்பே ஒருமுறை ஆஜராகியிருந்த விஜய், பொங்கல் முடிந்து 19ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நாளைய விசாரணைக்காக இன்றே சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏர்போர்ட்டில் ரசிகர்களுக்கு THUMBS UP

சென்னை விமான நிலையத்தில் விஜயை பார்த்த ரசிகர்கள் “விஜய் சார்” என உற்சாகமாக அழைத்தபோது, அவர் சற்றென்று கையை உயர்த்தி THUMBS UP காட்டியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் செயல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை குறித்து எதிர்பார்ப்புகள்

CBI விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தேர்தலுக்கு முன்பே விசாரணை முடிவுக்கு வந்து, உண்மையான குற்றவாளி யார் என்பது மக்கள் முன் தெளிவாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

தகவல் பகிர்வில் கட்டுப்பாடு?

அதேவேளை, விசாரணை நடைபெறும் காலகட்டத்தில் TVK கட்சியினர் விசாரணை தொடர்பான எந்த தகவலையும் வெளியிடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.

நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகிறார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles