தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்றால் அது தளபதி விஜய் தான். பொங்கலுக்கு விருந்தாக தளபதி விஜய் நடித்த வாரிசு படம் வெளியாகி தற்பொழுது பல கோடி வசூல் சாதனையை இந்த படம் புரிந்து வருகிறது.
குடும்பக் கதையை பின்னணியாக வைத்து எடுத்த வாரிசு படம் குடும்பத்தோடு இணைந்து பார்க்க முடியும் என்பதால் கூட்டம் கூட்டமாக தியேட்டர் நிரம்பி வழிகிறது.

என்ன தான் விஜய் சினிமா வாழ்க்கையில் மாஸ் ஹீரோ, தளபதி என்று போற்றப்பட்டாலும் சொந்த வாழ்க்கையில் அவர் பல போராட்டங்களை சந்தித்துதான் வருகிறார். ஒரு பக்கம் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் உடன் சண்டை எனவும், அம்மாவுடன் பேசவில்லை என்றும் கிசுகிசுக்கள் வெளிவந்து வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி தற்போது பரவி வரும் செய்தி தளபதி விஜய் அவர்கள் அவர் விட்டு மனைவியை பிரிய போகிறார் என்ற செய்தி அவ்வப்போது சமூக ஊடகத்தில் வெளிவந்து கொண்டு உள்ளது.

எதற்கும் பதில் அளிக்காமல் அவர் எப்போதும் சொல்வது போல் “உசுப்பேத்துவரனிடம் உம்முன்னும்,கடுப்பேத்துரவனிடம் கம்முனும்” இருக்க வேண்டும் என்பது போல அவர் வேலையை அவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். இருப்பினும் சமீபகாலமாக விஜய் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவரது மனைவி சங்கீதா கலந்து கொள்வதில்லை.
இதனால் ஒருவேளை இருவருக்கும் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என ரசிகர்களுக்குள் சந்தேகம் எழும்பி வருகிறது.

ஆனால் இந்த சந்தேகம் எல்லாம் வெறும் வதந்தி தான் இருவரும் ஒற்றுமையாக தான் உள்ளனர் என்று இந்த வதந்திக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விநியோகஸ்தரான கோபி தன் இணைய பக்கத்தில் இந்த விவகாரத்து செய்தியை முற்றிலும் பொய் என கூறியுள்ளார். இது போன்ற செய்தியை கிளப்புவர்கள் அவர்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள். இந்த கர்மா அவர்களை வேறொரு ரூபத்தில் வந்து தாக்கும் என பதிவு செய்துள்ளார் .

ரசிகர்கள் சண்டை என்பது வேறு, ஆனால் நம் நடிகர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தமான ஒன்று. ஆனால் அவர்கள் குடும்ப விஷயத்தில் தலையிடுவது தவறான செயல் எனவும் அவர் பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் நடிகர் விஜய் சங்கீதா இருவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்பது மக்களுக்கு தெரிய வந்தாலும் ஏன் அவர்கள் இருவரும் சேர்ந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.