தளபதி விஜயின் வாழ்க்கை பயணத்தில் மறக்கவே முடியாத ஒரு படம் தான் தலைவா. அந்த படத்தில் அரசியல் குறியீடு மற்றும் வசனங்கள் உள்ளது என்று அந்த படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் அழுத்தம் கொடுத்தது அப்போது ஆளுங்கட்சியான அதிமுக. தலைவா படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது ஆனால் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.
விஜய் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்களை சந்திக்க முயற்சி செய்த போது அதற்கும் அந்த தரப்பில் இருந்து பல தடைகள் வந்ததால் கவலையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். அதன் பின் சில சமரசத்திரிக்கு பிறகு தலைவா படம் தமிழ்நாட்டில் சில காட்சிகளை கத்திரி போட்டவுடன் வெளியானது.

சமீபத்தில் விஜய் குறித்து சந்தானம் பேட்டி ஒன்றில் கூறுகையில் தலைவா படத்தின் ரிலீஸ் முன் பிரிவியூ ஷோவ்விற்கு சென்று இருந்தேன் அப்போது விஜய் சாரிடம் படம் ரொம்ப தள்ளி போய் வெளியாகுதே என்று கேட்டேன் அதற்கு விஜய் சார் எல்லாம் உன்னால தான்யா நீ பாட்டுக்கும் அரசியலுக்கு வர எல்லா தகுதியும் இருக்குனு போறபோக்குல ஒன்னு போட்டுவிட்டுட்டு போய்ட அது அங்க அங்க பத்திகிட்டு எரியுதுனு சொன்னார்.

முதல் முதலாக அரசியல் சம்மந்தப்படுத்தி அவருக்கு வச்ச டயலாக் நான் தான் என்று சந்தானம் சிரித்து கொண்டே கூறி உள்ளார்.