தளபதி விஜய் தமிழ் சினிமாவின் தளபதி, வசூல் மன்னன் என்று இவரை ரசிகர்கள் அழைப்பது வழக்கம். சில நாட்களாகவே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில தயாரிப்பாளர்கள் தியேட்டர் உரிமையாளர்கள் பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

தமிழில் முன்னணி பத்திரிக்கையை விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கருத்து கணிப்பு எடுத்து அதை வெளியிட்டது அனைவர் அறிந்த ஒன்றே. விஜயின் திரைப்படங்கள் ரஜினியின் திரைப்படங்களின் வசூலை மிஞ்சுவதாலும், வெளிநாடுகளில் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதாலும், விஜயின் சுமார் படங்களே 100 கோடியை தாண்டி அசால்ட்டாக வசூல் செய்து வருவதாலும் இவரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதி வருகின்றனர்.

தற்பொழுது விஜய் நடித்து இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கும் லியோ திரைப்படத்தின் பிசினஸ் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு செய்துள்ளதாகவும் நிச்சயம் லியோ திரைப்படம் உலகம் உழுவதும் மாபெரும் வசூலை அள்ளி குவிக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் லியோ பட குழுவினர்.
இந்நிலையில் முன்னணி மீடியா ஒன்றுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார் அதில் அண்ணாமலை அவர்களிடம் அவரது வாழ்க்கை. காதல், திருமணம் மற்றும் அவர் சந்தித்த சவால்கள் அனைத்தையும் கேள்விலாக முன்வைத்து இருந்தனர்.
விஜய்க்கு நடிக்க தெரியாது- அண்ணாமலை

வரிசையாக பதில் சொல்லிக் கொண்டிருந்த அவரிடம் திடீரென்று தளபதி விஜய் அவர்களின் படத்தைக் காட்டி விஜய் பற்றி கேட்டதற்கு இவருடைய முதல் படத்தை நான் பார்த்திருக்கிறேன் அண்ணா அதில் இவருக்கு நடிக்க தெரியாது, டான்ஸ் ஆட தெரியாது இன்னைக்கு இந்தியாவோட முக்கியமான நடிகர்.
ஒரு மனிதன் தன்னுடைய சுய முயற்சியினாலும் கடின உழைப்பினாலும் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சினிமாவை பொருத்தவரை விஜய் ஒரு உதாரணம். முதல் படம் எனக்கு ஞாபகம் இருக்கு கேமரா முன் நிற்கவே வெட்கப்படுவார் விஜய் நம்மள மாதிரி, இன்னைக்கு அதெல்லாம் தாண்டி ஒரு மெகா ஸ்டாராக வளர்ந்து இருக்காருன்னா அந்த பயணம் ரொம்ப எளிதான பயணம் அல்ல.

இன்னைக்கு நிறைய சமுதாய விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பிச்சு இருக்காங்க அந்த விஷயங்களை ஆழமாக தீர்க்கமாக பேச வேண்டும் என்பது என்னை போன்ற மனிதர்களின் எதிர்பார்ப்பு என்று கூறிய அவர் நிறைய பேர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிற ஆள் நான் ஏனென்றால் மக்களுக்கு சாய்ஸ் இருக்கணும் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.
விஜய் அரசியலுக்கு கட்டாயம் வர வேண்டும் – அண்ணாமலை

அதனை தொடர்ந்து விஜய் அரசியல் வருகையை எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள் நீங்க அதை எப்படி எதிர்பார்க்கிறீங்க என்று அண்ணாமலையிடம் நெறியாளர் கேட்க பாஜக இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் அவர் அரசியலுக்கு வந்த பிறகு அதற்கான பதில் அந்த கட்சியிடம் இருந்து வரும். அண்ணாமலை தனிப்பட்ட என்னிடம் இருந்து இதற்கு பதில் சிஸ்டமா மாத்தணும் அப்படிங்கிற நோக்கத்தோட அரசியலுக்கு வரவங்க எல்லாரும் கண்டிப்பா வரணும் அதுக்காக தான் நான் இருக்கேன், மத்த அரசியல்வாதிகளும் இருக்காங்க. மக்களுக்கு நம்ம சாய்ஸ் கொடுக்கணும் அதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லதா இருக்கும்.

விஜய் அவர்களும் வந்து செய்யணும்னு நினைச்சாருன்னா MOST WELCOME கட்டாயமாக வரணும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.