Monday, August 17, 2026
-- Advertisement--

LEO படப்பிடிப்பை செல்போனில் படம் பிடித்து வெளியிட்ட மர்ம நபர்..!!! செம மாஸ் கெட்டப்பில் விஜய்…!!! எகிறும் எதிர்பார்ப்பு.

வாரிசு திரைப்படம் கொடுத்த மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், சஞ்சய் தத் போன்ற மாபெரும் பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

தற்பொழுது லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது விஜய் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான டைட்டில் லுக் வித்தியாசமாகவும் படு மாஸாக இருந்ததால் ரசிகர்கள் பெரிய அளவில் LEO திரைப்படத்தினை எதிர்பார்த்து வருகின்றனர்.

ஹாலிவுட் தரத்தில் படத்தை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல்களும் வெளிவந்து கொண்டே கையில் லியோ படத்தில் கெட்டப் பற்றி ரகசியமாகவே வைத்து வந்தது படக்குழு. இன்று காஷ்மீரில் லியோ படத்தின் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கையில் விஜய் லுக்கை யாரோ ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். லியோ படத்தின் சூட்டிங் காட்சிகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வீடியோவில் படுமாஸாக விஜய் கூலர் ஒன்றை மாட்டிக் கொண்டு செம ஸ்மார்ட் ஆக இருந்தார் விஜய். விஜயின் அந்த புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அடடா லோகேஷ் பெரிய சம்பவம் செய்ய இருக்கிறார் போலவே என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

லியோ திரைப்படத்தில் 14 வருடங்களுக்குப் பிறகு த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் அதுபோல விஜய்க்கும் திரிஷாவிற்கும் லியோ திரைப்படம் 67வது திரைப்படமாக அமைந்துள்ளது.

கமலஹாசன் லியோ படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles