Wednesday, December 4, 2024
-- Advertisement--

விஜய்க்கு மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்த ராணுவ வீரர்கள்…!!! மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வு…!!!

விஜய்க்கு ரசிகர் செல்வாக்கு அதிகம் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜயின் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் அது கண்டிப்பாக விஜய் தான்.

விஜய் தற்பொழுது தளபதி 69 படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கிறார் விஜயின் கடைசி படத்தை இயக்கிக் கொண்டிருப்பது இயக்குனர் ஹச் வினோத் அவர்கள் தான். எல்லோரும் ரசிக்கும் படி ஒரு நல்ல திரைப்படத்தை கடைசியாக கொடுக்க வேண்டும் என்று விரும்பிய விஜய் ஹச் வினோத்திடம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தபடி என்னுடைய கடைசி படம் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம்.

ஏற்கனவே வெற்றிகரமாக மாநாடு முடித்து 2026 தேர்தல் களத்தை சந்திக்க பல ஏற்பாடுகளை செய்து வரும் விஜய் அரசியலில் படு பிஸியாக இருந்தாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தளபதி 69 படப்பிடிப்பில் கலந்து கொண்டு தொடர்ந்து நடித்தும் வருகிறாராம்.

சமீபத்தில் தளபதி 69 திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னை ஆபீஸர் அகாடமியில் நடந்து வருகிறது அதாவது அந்த இடத்தில் ராணுவ வீரர் ஆகுவதற்கு சில இராணுவம் சார்ந்த அதிகாரிகள் பயிற்சி கொடுத்து பல ராணுவ வீரர்களை உருவாக்கி வரும் இடம். அந்த இடத்தில் தற்பொழுது விஜயின் 69 ஆவது படத்தின் சூட்டிங் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

சென்னை ஆஃபீஸ்ர் அகாடமி உள்ள அதிகாரிகள் விஜயிடம் உங்களை சந்திக்க எங்களது குடும்பம் மற்றும் குழந்தைகள் ஆவலுடன் இருக்கிறார்கள் என்ற செய்தியை தெரிவித்து இருக்கிறார்கள் உடனே அவர்களை சந்திக்க விஜய் ஓகே சொல்ல கிட்டத்தட்ட நூறு அதிகாரிகள் குடும்பத்துடன் உரையாடி சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார் விஜய்.

விஜய்க்கு அதிகாரிகள் மேளதாளத்துடன் வரவேற்பு கொடுத்து அசத்தி உள்ளனர். இந்த் நிகழ்ச்சியில் விஜயுடன் இயக்குனர் ஹ வினோத் இருந்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles