தளபதி விஜய் சினிமாவின் உச்ச நட்சத்திரம். அரசியலில் மாற்றம் கொண்டு வர வேண்டும் மக்களுக்கு எல்லாம் சமமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தன்னுடைய 200 கோடி ரூபாய் ஊதியத்தை விட்டுவிட்டு அரசியலில் இறங்கியுள்ளார். தவெக என்ற கட்சியை ஆரம்பித்து சமீபத்தில் மாபெரும் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் விஜய்.
மாநாடு வெற்றிகரமாக முடிந்ததற்கு முதல் காரணமே அந்த மாநாட்டை நடத்த இடம் கொடுத்து ஒத்துழைத்த விவசாயிகள் என்று உணர்ந்த விஜய் தன்னுடைய மாநாட்டிற்கு யாரெல்லாம் இடம் வழங்கினார்களோ அத்தனை விவசாயிகளையும் தன்னுடைய பனையூர் கட்சி அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வர அழைப்பு விடுவித்து இருந்தார். விஜயின் அழைப்பை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் இன்று விஜய்யை காண்பதற்காக கட்சி அலுவலகத்திற்கு குடும்பத்தோடு வந்தார்கள்.
விவசாயிகளை வாசலில் நின்று வரவேற்றார் தவெக துணைச் செயலாளர் ஆனந்த். அதன் பின் விஜய் என்ட்ரி கொடுத்தார். மாநாட்டுக்கு இடம் கொடுத்த அத்தனை விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்த விஜய் அவர்கள் குடும்பத்துடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு குடும்பத்தினரிடம் சில மணி நேரங்கள் பேசி உள்ளார். குறிப்பாக மாநாடு மேடை மற்றும் பந்தல் பணிகளை சிறப்பாக செய்த ஒருவருக்கு மோதிரமும் அணிவித்து மகிழ்ந்தார்.
விவசாயிகள் அனைவரும் விஜயின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்திய புகைப்படங்கள் தற்பொழுது வெளிவந்துள்ளது.
அது மட்டுமல்ல விஜயை பார்க்க வந்த விவசாய குடும்பத்தில் இருந்த ஒரு சிறுவன் நீங்கள் சீமானுடன் டாஸ்மார்க்கை மூடுங்கள் என்று அன்பு கோரிக்கை வைக்க அதற்கு விஜயும் சிரித்துக் கொண்டு நிச்சயம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.