Saturday, April 20, 2024
-- Advertisement--

பீஸ்ட் திரைவிமர்சனம் | BEAST REVIEW

தளபதி விஜய் நெல்சன் கூட்டணியில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட் . சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் நேற்று வெளியானது. பீஸ்ட் எப்படி இருந்தது வாங்க பார்க்கலாம்.

கதை:

வழக்கமான கதை என்றாலும் காட்சிப்படுத்திய விதத்தில் நெல்சன் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளார். காஷ்மீர் எல்லையில் முக்கிய தீவிரவாதி ஒருவரை பிடிக்க டார்கெட் செய்கிறது வீர ராகவன் (விஜய் ) தரப்பு. அந்த நேரத்தில் விஜய்க்கு நெருங்கிய குழந்தை ஒன்று எதிர்பாராத விதமாக விஜய் எடுக்கும் நடவடிக்கை காரணமாக இறந்து விடுகிறது. அந்த மன உளைச்சலில் சைக்காலஜிஸ்ட் டாக்டரைச் சந்திக்க சென்னை வருகிறார் விஜய் அப்போது ஒரு நிகழ்ச்சியில் பூஜாவை சந்திக்கிறார். பூஜாவுக்கும் விஜய்க்கும் பிடித்துப் போக இருவரும் காதலிக்கிறார்கள். அதன்பின் பூஜா வேலை பார்க்கும் செக்யூரிட்டி சப்ளை செய்யும் இடத்தில் விஜயும் பணியில் சேர்கிறார். செக்யூரிட்டி சப்ளை ஏஜென்ட் நடத்தும் ஓனராக விடிவி கணேஷ் இருக்க வேலை விஷயமாக விஜய், பூஜாவை கூட்டிக்கொண்டு ஷாப்பிங் மால் ஒன்றிற்கு செல்கிறார் அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக தீவிரவாதிகள் மால்லை HIJACK செய்கின்றனர். பிரதமர் மற்றும் செல்வராகவன் தரப்பு விஜயின் உதவியை நாடுகின்றனர். தீவிரவாதிகள் கைப்பற்றிய மாலில் உள்ள மக்களை எப்படி விஜய் மீட்கிறார். இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற தீவிரவாதிகளின் தலைவனை அவருடைய இடத்திற்கே சென்று எப்படி அழைத்து வருகிறார் என்பதே கதை.

நெல்சன் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் தமிழில் அடுத்த சூப்பர் ஸ்டார் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தளபதி விஜய்யை வைத்து ஜேம்ஸ்பாண்ட் படம் போன்று ஒன்றை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு உள்ளார். விஜயை ஒவ்வொரு பிரேமிலும் அழகாகவும் மாஸ் ஆகவும் காட்டியுள்ளார். படம் தொடங்கிய சில நிமிடங்கள் இந்தப் படம் விஜய் படங்களில் வித்தியாசமாக இருக்கிறது என்று ரசித்து பார்த்து வந்தார்கள் அனைவரும் இடைவேளை வரை சண்டைக் காட்சிகள் சூப்பர் ஹிட் பாடலான அரபி குத்து, பூஜா விஜய் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள், VTV கணேஷ் செய்யும் காமெடி சேட்டைகள் இன்டர்வல் பஞ்ச் என்று ஸ்லோவாக சென்றாலும் படம் நன்றாக இருந்தது.

இடைவேளைக்குப்பிறகு நெல்சன் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை திரைக்கதையும் ஏகப்பட்ட குழப்பங்கள். சில காட்சிகள் கட்டாகி அடுத்த காட்சிகள் வருவது எளிதாக பார்க்க முடிகிறது. விஜய் GUN எடுத்து சூட் செய்தால் படம் நல்ல கலெக்ஷன் செய்துவிடும் என்று நினைத்தாரோ என்னமோ விஜய் கையில் GUN கொடுத்து சுட்டுக் கொண்டே இருங்கள் என்று கூறியது போல இருந்தது. சரி நெல்சன் படம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது கொஞ்சம் சிரிப்பாக இருக்கும் என்று நம்பி வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம். காரணம் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் யோகி பாபுவை அமைதியாக உட்கார வைத்திருக்கிறார்கள். சில இடங்களில் மட்டுமே யோகி பாபு கவுண்டர் கொடுக்க முயற்சி செய்கிறார் அதற்கான காட்சி அமைப்பு சரியாக இல்லாததால் பெரிதாக எடுபடவில்லை. ரெடின் கிங்ஸ்லி டாக்டர் படத்தில் நகைச்சுவையில் தெறிக்கவிட்டு இருந்தார். நடிகர் யோகிபாபு அவர்களுடன் அமர்ந்து கொண்டு அமைதியக இருக்கிறார். யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி கிங்ஸ்லே போன்ற நடிகர்களை வைத்து கொண்டு அவர்களுக்கான காமெடி டயலாக் கூட கொடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.

படத்தில் சில காட்சிகளை ரசித்து செதுக்கி உள்ள நெல்சன் இரண்டாம் பாதியில் ஏன் இப்படி சொதப்பி இருக்கிறார் என்று பெரிய வருத்தத்தை கொடுத்தது. இரண்டாம் பாதியில் இறுதியில் வைத்த ஜாலியோ ஜிம்கானா பாடலை இண்டர்வெல் முடிந்து சில மணி நேரங்கள் கழித்து வைத்திருந்தால் கூட ரசிகர்கள் பெரிதாக ரசித்திருப்பார்கள் அந்த நல்ல பாடலையும் தூக்கி படம் முடிந்த உடன் வைத்திருந்தார். படத்தின் திரைக்கதையில் எந்த ஒரு சர்ப்ரைஸ் மொமெண்ட் மற்றும் சுவாரசியம் இல்லாததால் சில ரசிகர்கள் கடைசியில் வரும் பாடலை ரசிக்காமலே செல்கின்றனர்.

தளபதி விஜய் விஜய்யை பொருத்தவரை எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது மனிதர் 47 வயதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிறார் குறிப்பாக நடன காட்சிகளில் தமிழ் சினிமாவில் நடனத்தில் அசுரன் நான் தான் என்று சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் அந்த அளவிற்கு விஜயின் நடனம் பார்ப்பவர்களை வியக்க வைத்தது. விஜய் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். குறிப்பாக இன்டர்வெல் பிளாக்கில் நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்ற போக்கிரி டயலாக் திரும்ப சொல்லும் போது ரசிகர்கள் பீஸ்ட் மோடில் இருந்தார்கள்.

பூஜா ஹெக்டே தமிழுக்கு ரீ என்ட்ரி கொடுத்த பூஜா பார்க்க செம க்யூட்டாக விஜய்க்கு பொருத்தமான ஜோடியாக இருக்கிறார். விஜய்க்கு ஈடு கொடுத்து ஆட முயற்சியும் செய்து உள்ளார். மீண்டும் விஜயுடன் நடித்தாலும் சந்தேகமும் இல்லை.

பிளஸ்

தளபதி விஜய் நடிப்பு

அனிருத்தின் இசை

விடிவி கணேஷின் சில காமெடி காட்சிகள்

அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டரின் வித்தியாசமான சண்டைக் கட்சிகள்.

நிஜம் மால்லை போல செட் அமைத்த ஆர்ட் டைரக்டர் கிரண்

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்களுக்கு சபாஷ்.

மைனஸ்

நெல்சன் திலீப் குமார் அவர்களின் சரியாக எழுதப்படாத திரைக்கதை.

மொத்தத்தில் பீஸ்ட் திரைப்படம் மோசமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது இன்னும் நன்றாக இருந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

VERDICT : ABOVE AVERAGE

ஒருமுறை பார்க்கலாம்

Rating: 2.5 / 5

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles