Wednesday, July 17, 2024
-- Advertisement--

வலிமை 1st Single நாங்க வேற மாறி பாடல் REVIEW. பாடல் எப்படி இருக்கு தெரியுமா..!!!

தல அஜித் தமிழ்நாட்டில் அஜித்துக்கு என்று பெரிய ரசிகர் படையே இருப்பது யாராலும் மறுக்க முடியாது. அஜித்தின் திரைப்படங்கள் அவரது ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு அஜித்தின் மீது எவ்வளவு ரசிகர்கள் அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

ஆரம்ப காலத்திலிருந்து இப்போது வரை அஜித்தின் மீது தீவிர அன்பு கொண்ட ரசிகர்கள் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்த பின்னும் இன்றும் ரசிகர்கள் கலையாமல் இருக்கிறார்கள். விஸ்வாசம் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த அஜித் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்த இயக்குனர் வினோத் அவர்களுடன் இணைந்து பிங்க் என்ற ஹிந்தி ரீமேக் படத்தை நேர் கொண்ட பார்வை என ரீமேக் செய்து வக்கீலாக நடித்து அசத்தி இருந்தார்.

அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்பொழுது ஸ்ரீதேவி அவர்களின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் மீண்டும் இணைந்து வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே அஜித் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் அமைந்த அனைத்து பட பாடல்களும் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது அதுபோல வலிமை படத்தின் பாடல்களும் கண்டிப்பாக ஹிட் பாடலாக இருக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறி வந்தார்கள்.

இன்று வலிமை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டது யுவன் சங்கர் ராஜா இசையில் நாங்க வேற மாறி என்று ஆரம்பமாகிறது சிங்கிள் ட்ராக். நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் சங்கர் ராஜாவின் அதிரடியான இசையை இந்தப்பாடலில் கேட்கமுடிகிறது குறிப்பாக இந்த பாடலில் இடம் பெற்ற சில வரிகள் அப்படியே அஜித்திற்கு பக்காவாக பொருந்துகிறது. இந்த பாடலை எழுதிய நயன்தாராவின் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் வரிகளை அஜித் ரசிகர்களுக்காக செதுக்கி இருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் ஷங்கர் ராஜா இசையில் வேற மாறி அதிரடி காட்டியுள்ளார். உன் வீட்டை முதல் பாரு தானாக மாறும் உன் ஊரு வரிகள் அஜித் ரியல் பஞ்ச்.

ஆரம்பம் படத்தில் ஆரம்பமே, வேதாளம் படத்தில் வீர விநாயகா, விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற அடிச்சி தூக்கு பாடல் போல அஜித்திற்கு கலர் புல்லான மாஸ் பாடலாக இந்த வேற மாறி பாடல் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மொத்தத்தில் வேற மாறி பாடல் அஜித்தின் கலர்புல்லான மாஸ் ஹிட் பாடலாக அமையும். யுவன் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் நிச்சயம் கொண்டாடுவார்கள்.

பாடல் வரிகள் – 4/5

பாடல் ரேட்டிங்: 3.75 / 5

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles