Thursday, September 10, 2026
-- Advertisement--

டிசிஎஸ் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மற்ற ஐடி நிறுவனங்களில் ஏன் சோகம்?

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மார்ச் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தது.

சொன்னப்படியே தனது ஊழியர்களுக்கு நேற்று முதல் தகுதியான அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வுக்கான கடிதத்தை ஈமெயில் வாயிலாக வெளியிட்டு வருகிறது. இதன் படி இந்த ஆண்டு டிசிஎஸ் சராசரியாக 5 சதவீத சம்பள உயர்வு அளித்துள்ளது.

டிசிஎஸ் சம்பள உயர்வை ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக (A+, A, B, C) பிரித்து வழங்கியுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக இருக்கும் கே.கிருதிவாசன், 2026ஆம் நிதியாண்டில் மொத்தம் 28.1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.

இது முந்தைய நிதியாண்டை விட 6 சதவீதம் அதிகமாகும், கிட்டத்தட்ட சாமானிய ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக வழங்கப்பட்டு உள்ளது.

இதேவேளையில், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற பிற முன்னணி ஐடி நிறுவனங்கள் இன்னும் சம்பள உயர்வு குறித்து முடிவு எடுக்கவில்லை என்றும், நடப்பு நிதியாண்டின் பிற்பகுதியில் அறிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளன. இதனால் பிற ஐடி நிறுவன ஊழியர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles