Wednesday, March 26, 2025
-- Advertisement--

வரிசை கட்டிய புயலால் இன்னும் இத்தனை நாட்களுக்கு கனமழையா..? தமிழக வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

பருவமழையும், நிவர் புயல், புரவி புயல் என அடுத்தடுத்து புயல்களால் தமிழகத்தில் கனமழை கொட்டி வருகிறது.

தொடர்ந்து இரண்டு புயல்கள் வந்ததால் தமிழகத்தில் அதிகப்படியான மழை பெய்து வருகின்ற நிலையில் சற்று முன் வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் 11 இடங்களில் அதிக கனமழை இதுவரை பெய்து உள்ளது, மற்றும் 50 ற்கும் மேற்பட்ட இடங்களில் கன மழை பதிவாகி உள்ளது எனவும், கடலூர் திருவாரூர் நாகை போன்ற மாவட்டங்களில் அதிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles