தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் உதயநிதி அவர்களின் நெருங்கிய தொடருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி (வயது 45) அவர்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காரில் பயணம் செய்யும் போதே நெஞ்சு வலி:
கிருஷ்ணகிரியில் அரசு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது தனக்கு நெஞ்சு வலிப்பதை அருகில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். அதன்பின் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது.
பெங்களூரு மருத்துவமனையில் நடக்கும் சிகிச்சைகள்:
உடனே அந்த மருத்துவமனையில் இருந்து அன்பின் மகேஷ் அவர்களை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டார் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அன்பில் மகேஷ் அவர்களுக்கு ஆங்கியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது .
ரத்த நாளங்களில் ஏதாவது அடைப்பு இருந்தால் இதயத்திற்கு செல்லும் ரத்தம் சரியாக இதயத்திற்கு செல்லாமல் இருக்கும் அதனை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மூலம் கண்டறிந்து ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் அகற்றுவதற்காக இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ரத்தநாளத்தில் 3 அடைப்புகள் மேற்கொண்டு அறுவை சிகிச்சை:
தற்போது வந்துள்ள தகவலின் படி அன்பில் மகேஷ் அவர்களுக்கு தற்போது வந்துள்ள தகவலின் படி அவருக்கு இதே ரத்த நாளங்களில் மூன்று அடைப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
அன்பில் மகேஷ் விரைவில் பூரண குணமாகி வரவேண்டும் என்று சமூக ஊடகங்களில் அவரது நலம் விரும்பிகள் பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.