உலகையே அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. ஆரம்பத்தில் மூன்று இரண்டு என எண்ணிக்கையில் இருந்த தமிழ்நாட்டில் தற்போது ஆயிரத்தை தாண்டி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருந்து வருகிறது.
அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளே இந்த கொரானோ வைரஸ் தாக்கத்தை தங்க முடியாமல் தள்ளாடி வரும் நிலையில் இந்தியாவில் ஆரம்பத்திலேயே அதன் கொட்டத்தை ஒடுக்க ஊரடங்கு உத்தரவு வந்ததால் கொரானோ வைரஸ் இந்தியா அரசின் கட்டுக்குள் வந்தது.

பொதுவாக ஊரடங்கு உத்தரவு நாட்டு மக்களுக்கு எந்த அளவிற்கு பாதிப்போ அந்த அளவிற்கு தான் அரசிற்கும், எனினும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு வந்தது. இந்த கொரானோ வைரஸ் ஒழிந்த பின்பு நம் இந்தியா நாடு சமாளிக்க வேண்டிய பிரச்சனை நிறைய உள்ளது.
இது ஒரு புறம் இருக்க , தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பினும், அதே அளவில் இல்லை அதை விட கூடுதல் எண்ணிக்கையில் குணமடைந்தோர் எண்ணிக்கையும் இருந்து வருகிறது. சில நாட்களில் உயிர் இழப்புகள் இல்லாமலே இருந்தும் வருகிறது.

இந்நிலையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அதே சமயம் தமிழ்நாட்டில் இறப்பு விகிதமும் குறைவாகவே இருப்பது கூடுதல் நற்செய்தி.