Wednesday, April 24, 2024
-- Advertisement--

26 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான விலை உயர்ந்த பொருட்கள் லிஸ்ட் இதோ..!!!செருப்புகள் மட்டுமே 750 ஜோடிகள்…!!!

செல்வி ஜெ ஜெயலலிதா அதிமுக என்ற மாபெரும் கட்சியை வழி நடத்தி சென்றவர். அதிமுக கட்சியில் தலைவியாக இருந்துக் கொண்டு ஒரு பெண்ணாக தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு பலமுறை தமிழக முதல்வர் பொறுப்பில் அமர்ந்தவர்.

சிறந்த ஆளுமையுடன் அதிமுகவை நடத்திச் சென்ற ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவருடைய இறப்பில் மர்மம் உள்ளதாகவும் விசாரணை வேண்டும் என்று அனைவரும் கேட்டுக் கொண்ட தன் பேரில் ஆறுமுகசாமி அவர்கள் சார்பில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

ஆறுமுகசாமி அவர்களின் விசாரணையை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

தற்போது அவர்கள் தண்டனை காலம் முடிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததால் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதாஅவர்களின் வீட்டில் இருந்து ஏராளமான பட்டுப்புடவைகள், செருப்புகள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றப்பட்டு இருந்தன.

தற்பொழுது பல கோடி ரூபாய் மதிப்பிலான ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன பல ஆண்டுகளாக பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கஜானாவில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் 26 ஆண்டுகளாக கர்நாடகா அரசின் கருவூலத்தில் கிடக்கிறது.

அந்த பொருட்களை ஏலத்தில் விட வேண்டும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பொது மக்களின் வளர்ச்சிக்கு செலவு செய்யலாம் என்று அனைவரும் கோரிக்கை வைத்து வந்தனர் என்னென்ன பொருட்கள் கஜானாவில் இருக்கு தெரியுமா ?

கர்நாடக கஜானாவில் உள்ள பொருட்கள் லிஸ்ட் இதோ

பட்டுபுடவைகள்11,344
வெள்ளி பொருட்கள்700 கிலோ
செருப்புகள்750 ஜோடி
AC எந்திரங்கள்44
தொலைபேசிகள்33
சூட்கேசுகள்131
கை கெடிகாரங்கள்91
சுவர் கடிகாரங்கள்27
மின்விசிறிகள்86
அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள்146
டீப்பாய்கள்34
மேஜைகள்31
மெத்தைகள்24
உடை அலங்கார டேபிள்கள்9
அலங்கார தொங்கும் மின் விளக்குகள்81
ஷோபா செட்டுகள்20
உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள்31
கண்ணாடி டம்பளர்கள்215
இரும்பு பெட்டகங்கள்3
சால்வைகள்250
பிரிட்ஜ்12
டெலிவிஷன்10
வி.சி .ஆர் .கள்8
வீடியோ கேமரா1
CD பிளேயர்4
ஆடியோ பிளேயர்2
ரேடியோ24
வீடியோ கேசட்கள்1040
ரொக்கப்பணம்1 லட்சத்தி 93 ஆயிரத்து 202

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles