சிங்கப்பூர் நிறுவனம் PINDOT MEDIA தங்களது முதல் தயாரிப்பை தொடங்கி உள்ளார்கள். ROLL CAMERA ACTION என்ற YOUTUBE CHANNEL தொடங்கிய அவர்கள் முதல் தயாரிப்பான KD LOVER WEBSERIES முதல் பாகத்தை சமீபத்தில் வெளியிட்டார்கள்.
வெளியிட்ட சில மணி நேரங்களிலே பெரிய வரவேற்பை பெற்று வைரல் ஆகி வருகிறது இந்த WEBSERIES .

IT இளைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த webseries காதல், காமெடி என்று கலகலப்பாக நகர்கிறது. சிங்கப்பூர் தொழிலதிபரும் மற்றும் தயாரிப்பாளரான கிருஷ்ணமணி அவர்கள் IT கம்பெனியில் வேலை பார்க்கும் போது தனக்கு நேர்ந்த சம்பவங்கள் மற்றும் சுவாரசியமான சில நிகழ்வுகளை தற்பொழுது உள்ள ட்ரென்ட்க்கு கதையை அமைத்துள்ளார்.
இந்த படத்தை விக்னேஷ் மணிவண்ணன் இயக்கி உள்ளார். MARCLIN SSJ RAJ அவர்கள் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

இந்த webseries பார்த்தவர்கள் LOVE TODAY பாணியில் இளைஞர்களை கவர்ந்து வருகிறது என்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் இந்த WEBSERIES காட்சிகள் தான் இன்ஸ்டா பக்கங்களில் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
இது போல இளம் இயக்குனர்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.