Wednesday, July 17, 2024
-- Advertisement--

தமிழக கோவில்களில் முடிக்காணிக்கைக்கான கட்டண வசூல் இன்று முதல் நிறுத்தம்…!!! அதிரடி காட்டும் தமிழக அரசு.

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலைத்துறை மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிக்கைகள்:
ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12, 959 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 10,000 வழங்கப்படும்.


கோயில் பாதுகாப்பிற்கென 10,000 பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.


வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பல மாற்று இனங்களில் கோயிலுக்கு தேவைப்படும் இனங்கள் நீங்களாக ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருகாலையில் தங்கமாக மாற்றி சொக்கத் தங்கமாக மாற்றி கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வட்டி மூலமாக கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.


பணிகளை கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு ஆய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுக்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் சென்னை கொளத்தூர், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், தென்காசி மாவட்டம் கடையம், திருச்சி மாவட்டம் லால்குடி, திண்டுக்கல் மாவட்டம் தெப்பம்பட்டி உட்பட தமிழகத்தின் 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 150 கோடி செலவில் தொடங்கப்படும்.

கோயில்களில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கைகாண கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும் இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles