Wednesday, August 19, 2026
-- Advertisement--

பெண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டம்.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

தவெக அரசு ஆட்சியமைத்து 40 நாட்களைக் கடந்திருக்கிறது. சமீபத்தில் தவெக வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்த திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு காரணத்தை தமிழக அரசு தேடுவதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அதேசமயம், தமிழக அரசு 10 லட்சம் கோடி கடனில் இருக்கும் நிலையில், தவெக அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், அண்ணன் சீர், தாய்மாமன் தங்கமோதிரம் திட்டம் உள்ளிட்ட மேலும் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என அரசியல் நோக்கர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் விஜயின் 52 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளின் ஒன்றான தாய்மாமன் சீர் திட்டத்துக்கு 755.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்.தமிழர் பாரம்பரியத்தில் “தாய்மாமன் சீர் என்ற மரபின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தாயின் சகோதரர் தாய்மாமன் பங்கை ஏற்று, அரசு மருத்துவமனைகளில் புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்று வாழ்த்தும் வகையில் தங்கள் உள்ளிட்ட பரிசுகளை வழங்கும் விதமாகவும், தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையிலும், அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், 22 ஜூன் 2026 முதல் அரசு மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன் பெறுவார்கள். “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்” பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜயால் துவக்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles