தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், கட்சி அமைச்சர்களும், சினிமா பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.முதலமைச்சர் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டு முதலமைச்சராக பதவியேற்றப் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் தொண்டர்களும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
‘நேரம் பார்க்காமல் மக்கள் ஊழியனாக பணியாற்றி வருகிறார். நாயகனாக கொண்டாடப்பட்டவர் இன்று ஜனநாயகனாக மக்களுக்கு சேவையாற்றுகிறார். எளியவர்களின் கைகளில் ஆட்சிப் பொறுப்பை வழங்கி மக்காள்ட்சியை அலங்கரித்துள்ளார். உங்கள் கொள்கைப் பாதையிலும், மக்கள் பணியிலும் என்றும் உடன் பயணிப்போம்’ – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. ‘CM விஜய் நீண்ட ஆயுளுடன், நல்ல ஆரோக்கியத்துடன் வாழப் பிராத்திக்கிறேன்’ – பிரதமர் நரேந்திர மோடி.’மகிழ்ச்சியோடும், உடல் – உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்’ – திமுக தலைவர் ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறேன். தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை பாதுகாப்பதிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைந்து உழைப்பதிலும் நான் என்றும் உங்களுடன் துணை நிற்பேன்’ – எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி.’நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்!










