தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணைந்து கொண்ட விசிகவின் வன்னியரசுக்கும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி வன்னியரசி சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் அடங்கும்.ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரானார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும்.
ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களுக்காக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகளின் ஆதரவைப் பெற்றது. முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பொறுப்பேற்றார்.
சாதி ஒழிப்பும், தமிழ்த் தேசியமும் விசிகவின் கொள்கை. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர் திருமாவளவன். அவர் சொன்னது இப்போது நிறைவேறுகிறது. இப்போது அம்பேத்கரின் கனவு நோக்கி நாங்கள் நகர்கிறோம்.
தமிழகத்தில் விசிக தான் மையம் என்பதை எங்கள் தலைவர் நிரூபித்துள்ளார். அமைச்சர் பதவியில் மக்கள் பாராட்டும்படி, நேர்மையான வகையில் செயல்படுவோம்” எனத் தெரிவித்தது இங்கே மேற்கோள்காட்டத்தக்கது.










